இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தமிழகத்தை சேர்ந்தவருமான 40 வயதான பத்ரிநாத் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். லேசான அறிகுறி தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி அனைத்துவிதமான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் பத்ரிநாத் ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த முன்னாள் வீரர்கள் பங்கேற்ற சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெண்டுல்கர், யூசுப் பதான் ஏற்கனவே கொரோனா பாதிப்புக்குள்ளான நிலையில், தற்போது அதே அணிக்காக ஆடிய பத்ரிநாத்தும் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.