X

கிரிக்கெட் வீரர் டோனியை புகழ்ந்த ஆனந்த் மகிந்திரா

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும்
தொடர் தோல்வியை சந்தித்து கடைசி இரு இடங்களில் இருந்ததால் இந்த போட்டி முக்கியம் வாய்ந்த போட்டியாக கருதப்பட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய மும்பை 155 ரன்கள் எடுத்து
ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே ரன்களை சேர்த்து வைந்தாலும், தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தது. இந்நிலையில் கடைசி ஓவரில் சிஎஸ்கேவுக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது களத்தில் இருந்த முன்னாள் கேப்டன் தோனி 6,4,2, மற்றும் 4 ரன்களை அடித்து சிஎஸ்கே அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இதையடுத்து தோனிக்கு பல்வேறு நபர்களுக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தோனியின் ஆட்டத்தை பகிர்ந்த இந்திய தொழிலதிபரும், மகிந்திரா ஆட்டோமொபைல்
நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மகிந்திரா, ‘எங்களுடைய நிறுவனத்தின் பெயரில் மகி என்ற வார்த்தை இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்’ என மகிந்திர சிங் தோனியை பாராட்டி
ட்வீட் செய்துள்ளார்.

அவரைப் போலவே ரசிகர்களும், சர்வதேச வீரர்களும் தோனியை சிறந்த ஃபினிஷர் என பாராட்டி வருகின்றனர்.