கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா . இவரது மனைவி ரிவபா சோலங்கி. இருவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற பெண் குழந்தை உள்ளது. ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா கடந்த மாதம் பா.ஜனதாவில் இணைந்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத்சின், சகோதரி நைனாபா ஆகியோர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு ஜடேஜாவின் தந்தை அனிருத்சின் மற்றும் மூத்த சகோதரி நைனாபா ஆகியோர் இன்று சென்றனர்.

அங்கு பதிதார் இன போராட்ட தலைவர் ஹர்திக் படேல் மற்றும் ஜாம்நகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் முலு கண்டொரியா முன்னிலையில் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news