X

கிரிக்கெட் விளையாட்டை பார்க்க வந்து கோல்டு ஐ போனை தவறவிட்ட நடிகை ஊர்வசி ரவுத்தேலா

சிங் சாப் தி கிரேட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர் பெங்காலி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா பிரபலமடைந்தார். தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.

இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன் தினம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர். இதில் நடிகை ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார். அப்போது அவர் தனது 24 கேரட் கோல்டு ஐ போனை தவறவிட்டுள்ளார். இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும், யாராவது போனை பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

Tags: tamil cinema