கிரிக்கெட் ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தை பிடிக்கும் – ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே பேட்டி

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை இணைத்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. கிரிக்கெட்டுடன், பேஸ்பால், லேக்க்ராஸ், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டது.

இதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் என்று ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவர் கிரெக் பார்க்லே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

வேகமாக வளர்ந்து வரும் நமது கிரிக்கெட்டை உலகின் மிகப்பெரிய நிலைக்கு எடுத்துச் செல்ல இது வாய்ப்பளிக்கிறது. நான் விளையாட்டைப் பற்றி சிந்திக்க விரும்புகிறேன். இனி வரும் காலங்களில் கிரிக்கெட் போட்டி ஒலிம்பிக்கில் நிரந்தர இடத்தைப் பிடிக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports