Tamilஜோதிடம்

கிராம தேவதா வழிபாடு

தன்வந்திரி பீடத்தில்

கிராம தேவதா வழிபாடு நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் இன்று 19.02.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், நவகன்னிகளுக்கும் பொங்கலிட்டு படையலிடும் வைபவமும், கிராம தேவதா பூஜையும் நடைபெற்றது.

ஸ்ரீ முனீஸ்வரரின் சிறப்பு:

ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் ஸ்ரீ முனீஸ்வர்ரை இந்துக்கள் முக்கிய தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வருகிறார். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்முடைய நம்பிக்கையாகும். முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய முனீஸ்வரன் உக்ர தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார்.

வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரருக்கும், நவகன்னிகைகளுக்கும் மஹா அபிஷேகத்துடன் பொங்கல் வைத்து படையலிட்டு பிராத்தனை செய்யப்பட்டது. இந்த பூஜையானது வருகிற 22.02.2019வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் பந்தக்கால் முஹூர்த்தத்திற்கும் மார்ச் மாதம் 13 முதல் 17 வரை நடைபெற உள்ள 15 ஆம் ஆண்டு விழாவும், 16 திருக்கல்யாணமும், ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழாவும், 1000 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியும், இதர வைபவங்களும் தடையின்றி நடைபெற நடைபெற்றது. இந்த பூஜையில் திருமணம் நடைபெற வேண்டி வந்திருந்த ஆண், பெண் பக்தர்கள், குழந்தை வரம் வேண்டி வந்திருந்த தம்பதிகள், சாந்தி பூஜையில் பங்கேற்ற நபர்கள் கலந்து கொண்டனர். இப்பூஜையானது பக்தர்கள் முனீஸ்வரர், நவகன்னிகைகள் மற்றும் கிராம தேவதா அருள் பெற்று ஒவ்வொரு குடும்பத்திலும் ஆரோக்யத்துடன் ஐஸ்வர்யம் பெற்றும் ஆனந்தமாக வாழ நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *