Tamilசினிமா

கிராமி விருது வென்ற இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

சர்வதேச இசை உலகின் உயரிய விருதாக கிராமி விருதுகள் கருதப் படுகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.

இதில் இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா ஆகியோர் கிராமி விருதுகளை வென்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு
பெருமை சேர்த்துள்ளனர்.

சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் ‘டெவைன் டைட்ஸ்’க்காக ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார்.

சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில் கலர்புல் வேர்ல்ட் ஆல்பத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா கிராமி விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில் டிவைன் டைட்ஸ் ஆல்பத்திற்காக கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரிக்கி கேஜ் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்திக்கு பதில் அளித்துள்ள பிரதமர், குறிப்பிடத்தக்க இந்த சாதனைக்கு பாராட்டுக்கள் மற்றும் உங்களது எதிர்கால முயற்சிகள் வெற்றியடையவும்
நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.