இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினர் உள்பட பலருக்கு கிராமி விருது வழங்கப்பட்டது.
இதுபோன்று அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.
விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.