கினியா நாட்டின் ராணுவ தளத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 17 பேர் பலி!

கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந்துள்ளது.

இந்த ராணுவ தளத்தில் டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்துள்ளது. சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து தொடர்பாக கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் கூறுகையில், டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools