X

கிங், காங் என்று நாய்களுக்கு பெயர் வைத்த தனுஷ்

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கைவசம் தி கிரே மேன், அத்ரங்கி ரே, மாறன், நானே வருவேன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் தனது திரைப்படங்கள் பற்றிய அறிவிப்புகளை பகிர்ந்து வருவார்.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் மற்றும் மகன்களுடன் இருக்கும் புகைப்படங்களை ஏற்கனவே பதிவு செய்து இருந்தார். இந்நிலையில், இரண்டு நாய்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனுஷ் பதிவு செய்திருக்கிறார். மேலும் கிங், காங் என்று பெயர் வைத்திருக்கும் நாய்களை தனது குடும்பத்திற்கு வரவேற்பதாக பதிவு செய்திருக்கிறார்.