காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து! – அமித்ஷா உறுதி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று காலை மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்தஸ்து ரத்துடன் ஜம்மு- காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மாநிலங்களவையில் மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய அமித் ஷா ‘‘காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். யூனியன் பிரதேசம் என்பது தற்காலிகமானதே’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools