X

காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சுற்றுப்பயணம்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று புறப்பட்டுச் செல்லும் அவர் கார்கில் வெற்றி தினத்தையொட்டி லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச்சின்னத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார்.

ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 27-ம் தேதி பங்கேற்கும் ராம்நாத் கோவிந்த், அதைத்தொடர்ந்து மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். ஜனாதிபதியின் வருகையையொட்டி காஷ்மீர் மற்றும் லடாக்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.