காஷ்மீர் பிரச்சினையில் ஆர்வம் காட்டாத பாகிஸ்தான் மக்கள்! – ஆய்வில் வெளியான தகவல்

காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுவதில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அந்த நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாக இருப்பது தெரியவந்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை.

ஆய்வு நடத்தப்பட்டவர்களில் 53 சதவீதம் பேர் நாட்டின் பொருளாதார நிலைதான் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் வேலை இல்லா திண்டாட்டம்தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது என்று 23 சதவீதம் பேரும், ஊழல் பிரச்சினைதான் என்று 4 சதவீதம் பேரும், குடிநீர் பிரச்சினைதான் என்று 4 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்களின் 8 சதவீதம் பேர் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்காக குரல் கொடுத்துள்ளனர். பாகிஸ்தானின் 4 மாகாணங்களில் உள்ள மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools