X

காஷ்மீர் சிறையில் இருந்த தீவிரவாதிகள் ஆக்ரா சிறைக்கு மாற்றம்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காஷ்மீரின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என 70 பேரை நேற்று ஆக்ரா மத்திய சிறைக்கு மத்திய அரசு மாற்றியது. இதற்காக விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 70 பேரும் பலத்த பாதுகாப்புடன் ஆக்ரா விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் அவர்கள் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதையொட்டி ஆக்ரா விமான நிலையத்தில் இருந்து சிறை வளாகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் பயங்கரவாதிகளை கொண்டு சென்ற வாகனத்திலும், அவர்களின் அடையாளம் வெளியே தெரியாத அளவுக்கு கறுப்பு துணியால் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.