காஷ்மீரில் புதிய கட்சி தொடங்கிய குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம் அக்கட்சியில் இருந்து விலகினார். அத்துடன் கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் காங்கிரசை விட்டு விலகினர்.விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் இன்று புதிய கட்சியை தொடங்கினார். கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்தார். கட்சியின் பெயர் ஜனநாயக ஆசாத் கட்சி (டெமாக்ரடிக் ஆசாத் பார்ட்டி).

பின்னர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘புதிய கட்சிக்காக சுமார் 1,500 பெயர்களை உருது, சமஸ்கிருதத்தில் எங்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்தி மற்றும் உருது ஆகியவற்றின் கலவை ‘இந்துஸ்தானி’. பெயர் ஜனநாயகம், அமைதி மற்றும் சுதந்திரத்தை பிரதிவலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என நினைத்து இந்த பெயரை தேர்வு செய்தேன். கொடியில் உள்ள அடர் மஞ்சள் நிறம் படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையையும், வெள்ளை நிறம் அமைதியையும், நீல நிறம் சுதந்திரம், கற்பனை மற்றும் வான் வரம்புகளையும் குறிக்கிறது’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools