Tamilசெய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை

ஜம்மு-காஷ்மீரில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை தேடும் பணியில் அம்மாநில காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயலும் பயங்கரவாத செயல்களையும் தடுத்து வருகிறார்கள்.

இன்று சோபியான் மாவட்டத்தில் உள்ள கதோஹலன் என்ற இடத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட டி.ஆர்.எஃப் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

இதுதொடர்பான முழுத் தகவல் விரைவில் தெரிவிக்கப்படும் என காஷ்மீர் மண்டல காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.