காஷ்மீரில் எல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவம்
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாலகோட் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.