X

காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் 5 பயங்கரவாதிகள் கைது

காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து நாசக்கார வேலைகளில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் ராணுவத்தினரின் உதவியுடன் குல்கம் மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டு குவியல்கள் ஆகியவற்றை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். பாதுகாப்பு அதிகாரிகள் பயங்கரவாதிகள் 5 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

Tags: tamil news