காவல் துறைக்காக ஒரு லட்சம் கிரிமி நானிசினிகளை வழங்கிய சல்மான்கான்

நாட்டின் மற்ற நகரங்களை காட்டிலும் மும்பை தான் ஆட்கொல்லி வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரில் களத்தில் நின்று போராடும் போலீசாரும் இங்கு அதிகளவில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தி நடிகர் சல்மான்கான் தான் சமீபத்தில் தொடங்கிய பிரஷ் எனும் பராமரிப்பு மற்றும் சீர்படுத்துதல் பிராண்டு தயாரிப்பான கிருமிநாசினியை மும்பை போலீசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். போலீசார் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்வதற்காக மொத்தம் 1 லட்சம் கிருமிநாசினி பாட்டில்கள் சல்மான்கான் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக முதல்-மந்திரி அலுவலக டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சல்மான்கானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்த முதல் நடிகர் சல்மான்கான் தான். பன்வெலில் தனது பண்ணை வீட்டுக்கு அருகில் உள்ள கிராம மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார். மேலும் தேவைப்படுவோருக்கு உதவுமாறு தனது ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools