கபாலி, கஜினிகாந்த், குண்டு, வி1, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபலமடைந்தவர் லிங்கேஷ்.
இவர் தற்போது புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். மாணவர்களின் கல்விக்கடன் அதன் பின்னால் இருக்கும் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் பற்றி திரில்லர் காமெடி கலந்த
கதையமைப்போடு இப்படம் உருவாகியுள்ளது. ’காலேஜ்ரோடு’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எம்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெய் அமர்சிங்
இயக்கியிருக்கிறார்.
படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் வெளியாக இருக்கும் இந்த படம் குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் நெகிழ்ச்சியோடு பகிந்துள்ளார். அவர் கூறியிருப்பது, மாணவர்களின் கல்விக்கடன் குறித்த
அரசியல் பேசினாலும் கமர்சியலாக இருக்கிறது, மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று கூறி குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.