காலிஸ்தானுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட 6 யூடியூப் சேனல்கள் முடக்கம்
காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித் பால்சிங்கின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்னாலாவில் போலீஸ் நிலையத்தில் புகுந்து ரகளையில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் காலிஸ்தான் ஆதரவு செய்திகளை ஒளிபரப்பி வந்ததாக 6 யுடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சேனல்கள் வெளிநாடுகளில் இருந்து இயங்கி வந்தவை எனவும், கடந்த 10 நாட்களாக இந்த 6 சேனல்களும் முடக்கப் பட்டுள்ளதாகவும், மத்திய அரசு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சேனல்களை யுடியூப் நிறுவனம் முடக்கி இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.