காற்றோட்டம் நன்றாக இருந்தால் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் – மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது, பொதுமக்கள் பாதிப்பில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என்பது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து வழிகாட்டுதல்களையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறது. அவ்வகையில், தற்போது கொரோனாவின் 2வது அலை பரவலை தடுக்க மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், வீடு, அலுவலகங்களில் காற்றோட்ட வசதி நம்மை பாதுகாக்கும், ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும், எக்ஸாஸ்ட் மின்விசிறியை பயன்படுத்த வேண்டும், வெளிகாற்று வரும் வகையில் வீடு, அலுவலக அறைகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

முககவசம், தனிநபர் இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் காற்றோட்ட வசதியையும் இணைத்து தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, காற்றோட்டம் நன்றாக இருந்தால், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்கும் என கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools