கார் பெனட்டில் இழுத்து செல்லப்பட்ட பெண் – ராஜஸ்தானில் பரபரப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கார் பகுதியில் உள்ள சாலை ஒன்றில் காரை இயக்கி வந்த ஓட்டுனர் பெண் மீது மோதி காரின் பெனட்டில் வெகு தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பான அதிர்ச்சியான சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் காரின் பெனட்டில் தொங்கியபடி 500 மீட்டருக்கு இழுத்துச் செல்வது காணமுடிகிறது. மேலும், அந்தப் பெண்ணைக் காப்பாற்ற பலர் காரின் பின்னால் ஓடுவதைக் காண முடிந்தது.

ஆனாலும் ஓட்டுனர் காரை நிறுத்தவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட காரின் உரிமம் தகடு உள்ளிட்ட தகவல்களை கூடுதல் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத கார் ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news