X

கார்த்தியின் ‘சர்தார்’ பட டீசரை வெளியிட்ட சூர்யா

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘சர்தார்’. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘சர்தார்’ திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவார் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘சர்தார்’ படத்தின் டீசரை அறிவித்தபடி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.