கார்த்தியின் சர்தார் பட படப்பிடிப்பு தொடங்கியது

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார்.

தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வரும் இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும், இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools