நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தீ இவன்’. இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கியவரும், விஜய்சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.
நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுகன்யா நடித்துள்ளார். மேலும் ஐஸ்வர்யா லட்சுமி, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில், 45 நாட்கள் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், மும்பையிலும் நடைபெற இருக்கிறது. மும்பையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்பில், நடிகை சன்னி லியோன் நடிக்கும் கவர்ச்சி நடன பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். நடிகை சன்னி லியோன் ஏற்கனவே தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.