Tamilசினிமா

கார்த்திக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி

சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. இப்படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், சூர்யாவை தொடர்ந்து, கார்த்திக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.