காயம் காரணமாக வங்காளதேசம் வீரர் அல் ஹசன் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகினார்

டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports