X

காமெடி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை அஞ்சலி

தமிழில் ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமான அஞ்சலி, இதையடுத்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சமீப காலமாக தமிழில் பட வாய்ப்புகள் சரிவர அமையாததால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் தெலுங்கில் அவர் நடித்த ‘வக்கீல் சாப்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்ததாக மேலும் ஒரு புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’ என்கிற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் அஞ்சலி ஹீரோயினாக நடிக்க உள்ளார். கருணா குமார் இப்படத்தை இயக்க உள்ளார். தெலுங்கில் பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள பிரியதர்ஷி என்பவர் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க உள்ளாராம்.