இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பேட்மிண்டன் ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், மலேசியாவின் சீ யாங் விளையாடினர்.
முதல் செட்டை 19-21 என கோட்டை விட்ட லக்ஷயா சென், அடுத்த இரு செட்களை 21-9, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்தியா 20 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.