X

காமன்வெல்த் விளையாட்டு போட்டி – பளூ தூக்குதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப் பதக்கம்

காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதலில் இந்தியாவுக்கு 2வது வெண்கலம் கிடைத்துள்ளது. காமன்வெல்த் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் வெண்கலம் வென்றார்.

பெண்களுக்கான 71 கிலோ எடைப்பிரிவில் 212 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் ஹர்ஜிந்தர் கவுர் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலம் வென்றார்.

பளு தூக்குதலில் இதுவரை 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது. இதன்மூலம் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றுள்ளது.