X

காமன்வெல்த் விளையாட்டு போட்டி – இந்திய டேபிள் டென்னிஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

முதல் போட்டியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய் – சத்யன் ஞானசேகரன் ஜோடி 11 – 6, 11 – 7, 11 – 7 என்ற கணக்கில் நைஜீரியா ஜோடியை இரண்டாவது போட்டியில் இந்தியாவின் சரத் கமல் 3-1 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார். மூன்றாவது போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் 11 – 9, 4 – 11, 11 – 6, 11 – 8 என்ற கணக்கில் நைஜீரிய வீரரை வீழ்த்தினார். இதன்மூலம் ஆண்கள் குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் நைஜீரியாவை 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இறுதிப்போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை எதிர்கொள்கிறது. இதன்மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.