காமன்வெல்த் விளையாட்டு போட்டி – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிப்பு

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டிகள் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.

8 அணிகள் பங்கேற்கும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் குரூப் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, பார்படாஸ், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளும் குரூப் ‘பி’ பிரிவில் இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்த நிலையில், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும் ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மகளிர் அணியில் ஷஃபாலி வர்மா, எஸ் மேக்னா, தனியா சப்னா பாட்டியா (விகீ), யாஸ்திகா பாட்டியா (விகீ), தீப்தி ஷர்மா, ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா தாக்கூர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், சினே ராணா. காத்திருப்பு: சிம்ரன் தில் பகதூர், ரிச்சா கோஷ், பூனம் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools