Tamilசெய்திகள்

காப்பீட்டு கோரல்கள் நிராகரிப்பினை தவிர்ப்பது எப்படி?

காப்பீட்டுக் கோரல்கள் நிராகரிப்பினை தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து ’மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தின் கூடுதல் நிர்வாக இயக்குநர் வி.விஸ்வநாதன் அளித்திருக்கும் விளக்கம் இதோ,

இடர்பாடுகளே மானுட வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகள் குறித்து நமக்கு நினைவூட்டும். மேலும், நிதியியல் நிச்சயமற்றதன்மைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும். ஆயுள் காப்பீட்டுத் திட்டம் என்பது அத்தகைய இடர்பாடுகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் மற்றும் காப்பாற்றும் அத்தகையதொரு கவசமே ஆகும். ஆனால், துரதிருஷ்டவசமான நேரங்களில், ஒரு ஆயுள் காப்பீடு நிராகரிக்கப்பட்டால் என்னவாகும்? குடும்பத்தினரை நிர்கதியாக, எந்தவொரு நம்பிக்கையும் இன்றி விட்டுச் செல்வது என்பது, ஆயுள் காப்பீட்டுக் கொள்கையின் நோக்கத்தையே சிதைத்துவிடும் அல்லவா…

எனவே, உங்களது அன்புக்குரியவர்களின் நிதியியல் பாதுகாப்பினை உறுதி செய்ய, உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட வேண்டியதை உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம்.

ஆரம்பநிலையிலேயே உங்கள் சொந்த ஆயுள் காப்பீட்டுத் திட்ட முன்மொழிவை நிரப்புவதில் ஈடுபடவும்

புத்தர் அவர்கள் கூறியவாறு, “உங்கள் வேலையை நீங்களே செய்யுங்கள், பிறர் மீது சார்ந்திருக்காதீர்கள்” என்பது இதற்குச் சிறப்பாகப் பொருந்தும். ஒருவர் ஒரு பாலிசியை தேர்ந்தெடுக்க தீர்மானிப்பதன் முதல் அடிப்படை படிநிலை, படிவத்தை நிரப்புவதாகும். அதை மேற்கொள்ள, நுகர்வோர்கள் அவர்களது முகவர்களை பணிப்பது மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தை அடைவதற்கு ஏற்படுத்தும். முகவரைச் சார்ந்திருப்பது என்பது பொதுவான ஒரு அம்சமாகவே இருப்பினும், படிவங்கள் நிரப்புதலில் ஒருவர் எப்போதும் தனிப்பட்ட கவனம் மேற்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். ஏனெனில், முன்மொழிவு படிவத்தில் ஏதேனும் தகவல் தவறாக குறிக்கப்படுவது, கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும். தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்னும் ஆயுள் காப்பீட்டின் அடிப்படை நோக்கத்தையே இது சிதைத்து விடுகிறது.

தகவல்களை மறைப்பதை தவிர்க்கவும்

முன்மொழிவு படிவத்தை நீங்கள் நிரப்புவதன் அடிப்படையிலேயே ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன, மற்றும் பாலிசிதாரர்கள் சில நேரங்கள் ஒரு புதிய பாலிசிக்கு விண்ணப்பிக்கையில் முக்கியத் தகவல்களை வழங்கத் தவறுகின்றனர். நிதியியல் நிலைமை – வருவாய் ஆதாரம், அவரது பழக்கங்கள் / ஆரோக்கிய நிலை மற்றும் ஏதேனும் பிற ஆயுள் காப்பீடுகள் உள்ளது ஆகிய மூன்று விஷயங்கள் எப்போதும் மிகச்சரியாக வழங்கப்பட வேண்டும். அத்தகைய விஷயங்களின் அடிப்படையிலேயே காப்பீட்டு நிறுவனம் எங்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்து முடிவினை மேற்கொள்வது ஏதுவாக்கப்படுகிறது.

நீங்கள் முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்றோ அல்லது ஏதேனும் தகவல்களை மறைத்துள்ளீர்கள் என்றோ காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரிய வந்தால், உண்மைகளை மறைத்ததன் அடிப்படையில், உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.

முன்னமே-இருக்கும் உடற்பிரச்சினைகள் குறித்து கவனமாக விவரிக்கவும்

காப்பீட்டு நிறுவனத்தல் வழங்கப்படும் முதல் பாசிசியின் தேதிக்கு 48 மாதங்களுக்கு முன்பாக ஏதேனும் உடல் நிலைகள் குறித்த அறிகுறிகள்  தெரியவந்திருந்தாலோ அல்லது அவற்றுக்கு மருத்துச் சிகிச்சையை நீங்கள் பெற்றிருந்தாலோ, அவை முன்னமே-இருக்கும் உடற்பிரச்சினைகள் ஆகும். முன்னமே-இருக்கும் நோய்கள் அல்லது வேறு ஏதேனும் நிலைகள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் மற்றும் அவற்றை மறைக்கக்கூடாது. நீங்கள் அவற்றை உறுதி செய்வது, உங்கள் கோரிக்கைகளை நிராகரிக்க ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நீங்கள் வாய்ப்பளிக்கக்கூடாது.

வாரிசுதாரர் விபரங்கள் சரியாக நிகழ்நிலைப்படுத்துதல்

தவறான வாரிசுதாரர் விபரங்கள் கோரிக்கையை நிராகரிக்காது என்றாலும், உறவுமுறை குழப்பங்களால் வாரிசுதாரருக்கும் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையில் நீண்ட கால சட்டரீதியிலான போராட்டங்கள் ஏற்பட அவை வழிவகுக்கலாம். மாறிவரும் வாழ்க்கை நிலைகளுக்கு ஏற்ப நீங்கள் உங்கள் ஆயுள் காப்பீட்டு வாரிசுதாரர்களை மாற்றலாம். உதாரணத்திற்கு, நீங்கள் திருமணமாகாத நிலையில் பெற்றோர்களை வாரிசுதாரர்களாக நியமித்திருக்கலாம் மற்றும் திருமணம் ஆனவுடன் உங்கள் துணை அல்லது உங்கள் குழந்தைகளை வாரிசுதாரர்களாக நியமிக்கலாம். எனவே, வாரிசுதாரர்கள் குறித்த விபரங்களை அவ்வப்போது நிகழ்நிலைப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

உங்கள் பாலிசி காலாவதியாகாமல் இருப்பதை உறுதி செய்யவும்

ப்ரீமியம்கள் சரியான தேதிகளுக்குச்  செலுத்தப்படவில்லை எனில், பாலிசி காலாவதியாகலாம். குறிப்பிட்ட தேதி கடந்த பின்பும், பாலிசிதாரர்களுக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு கருணை காலத்தை வழங்கும். அத்தகைய கருணை காலத்திற்குப் பிறகும், ப்ரீமியம் தொகைகள் செலுத்தப்படவில்லை எனில், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கோரிக்கையை நிராகரிக்கும். எனவே, இக்காரணத்தின் அடிப்படையில் பாலிசி நிராகரிக்கப்படுவதை தவிர்க்க, ப்ரீமியம் பேமெண்ட் ஷெட்யூலிற்கு இணங்கி நடக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.

ஆயுள் காப்பீடு என்பது வெறும் ஒரு வரி சேமிப்பு முறையல்ல. அது ஒரு தீவிரமான நிதியியல் முறையாகும் மற்றும் அதை சரியாகப் பயன்படுத்துவது, உங்கள் குடும்பம் மற்றும் சார்ந்திருப்போரின் கண்ணியத்தைக் காக்கும். சீரான கோரிக்கைகள் செயல்முறையை உறுதி செய்ய, பெரும்பாலான நிறுவனங்கள் நன்கு பயிற்சி பெற்ற கோரிக்கைகள் அலுவலரை வழங்குவார்கள் மற்றும் நீங்கள் வாங்கிய ஆயுள் காப்பீடுகள், முகவாளர் ஆலோசகர் மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் தொடர்பு விபரங்கள் மற்றும் கோரிக்கையை பதிவு செய்தவற்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விபரங்களை உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியதும் மிகவும் முக்கியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *