Tamilசினிமா

கானா பாடகருக்கு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

கொண்ட்டாடமும் கோலாகலமுமாகத் துவங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10-வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான சம்பவம் நிகழ்ந்தது.

எளிய பின்னணியிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கானா பாடகர் சேட்டுவிற்கு சினிமா வாய்ப்பு தருவதாக உறுதியளித்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் நிகழ்ச்சியிலும் அந்நிகச்சி இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்னதாகவே இசையமைப்பாளர் தமன் பல ஜூனியர் பங்கேற்பாளர்களுக்கு சினிமா வாய்ப்பினை அளித்தார்.

அதே போல் இப்போது சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆரம்பகட்டத்திலேயே, கானா சேட்டு என்ற பங்கேற்பாளருக்கு சினிமா வாய்ப்பை உறுதி செய்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், தான் இசையமைக்கும் படத்தில் கானா சேட்டுக்கு பாடும் வாய்ப்பு தருவதாக உறுதியளித்தார். எதிர்பாராத இந்த சர்ப்ரைசால் கானா சேட்டு மகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், இறுதிக்கட்ட வெற்றியாளர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதைத் தாண்டி, ஆரம்பத்திலேயே இப்படி ஒரு வாய்ப்பு பங்கேற்பாளருக்குக் கிடைத்தது அனைவரையும் வியக்கவைத்த அற்புத தருணமாக அமைந்தது.