X

காந்தி படம் வெளிவந்த பிறகு தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு காந்தியை தெரியுமா? – பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், “தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி படத்தை (1982) எடுக்கும் வரை மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை” என்ற பிரதமரின் கருத்து எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ற பெயரை மோடி கேள்விப்பட்டிருக்கிறாரா? மகாத்மா காந்தியைப் பற்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்ன சொன்னார் என்று மோடிக்கு தெரியுமா?

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு (இறப்பு 1955) ‘காந்தி’ படம் வெளிவந்த பிறகுதான் (1982) மகாத்மா காந்தியைப் பற்றி தெரியுமா?” என்று பதிவிட்டுள்ளார்.