காந்தி குறித்த சர்ச்சை பேச்சு – பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி

1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோவின் ‘காந்தி’ திரைப்படம் வெளியாகும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறிந்திருக்கவில்லை என்று தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு மோடி அளித்த போட்டியில், “தயவுசெய்து என்னை மன்னிக்கவும், ஆனால் காந்தியை யாருக்கும் தெரியாது. முதன்முறையாக, காந்தி படம் (1982) எடுக்கப்பட்டபோது தான், காந்தியை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் மக்கள் தெரிந்து கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காந்தி குறித்து மோடி பேசியது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மகாத்மா காந்தியைப் பற்றி அறிய ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools