தலைநகர் டெல்லியில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மகாத்மா காந்தியை பற்றிய குறும்படம் ஒன்றையும் வெளியிட்டார்
இதில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான், நடிகைகள் கங்கனா ரணாவத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தயாரிப்பாளர் போனிகபூர், ஏக்தா கபூர், இம்தியாஸ் அலி உள்பல பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, காந்தியின் போதனைகளை பரப்புவதில் திரைத்துறை பெரும் பங்காற்றி வருகிறது. 1947 வரையிலான சுதந்திரப் போராட்ட எழுச்சியையும், 1947 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான நாட்டின் வளர்ச்சியையும் திரைத்துறை எடுத்துரைக்க வேண்டும் என தெரிவித்தார்.
உரையாடலுக்கு பிறகு, பிரதமர் மோடியுடன் பாலிவுட் நடிகர் நடிகைகள் ஆர்வமாக செல்பி எடுத்துக் கொண்டனர்.