X

காந்தியின் பிறந்தநாள் – நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 151-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தனது டுவிட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி,

காந்தியடிகள் வாழ்க்கை, உன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. வளமான, அன்பான இந்தியாவை உருவாக்குவதில் காந்தியின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றன என்று புகழாரம் சூட்டி உள்ளார்.