X

காதல் விவகாரம் – உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவி சுட்டு கொலை

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தனா பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி டினா சவுத்ரி.

உடன் படிக்கும் மாணவரை காதலித்தார். சாதியை காரணம் காட்டி குடும்பத்தினர் எதிர்த்தனர். ஆனால் டினா பிடிவாதமாக இருந்ததால் டினாவின் உறவினர் கிட்டு என்கிற பிரசாந்த் சவுத்ரி நண்பர்களுடன் சேர்ந்து டினாவை சுட்டு கொன்று விட்டார்.

அவருக்கு பெற்றோரும் கிட்டு குடும்பத்தினரும் உதவியாக இருந்துள்ளனர். டினாவின் பெண்ணுறுப்பிலும் தொடை பகுதியிலும் 3 முறை சுட்டு கொடூரமாக கொன்றுள்ளனர். அவரது உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிக்குமாறு நாடகம் ஆடினர். கொள்ளையர்கள் வீடு புகுந்து சுட்டதாக கூறியுள்ளனர்.

போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு சொந்த குடும்பத்தினரே டினாவை கொடூரமாக சுட்டு கொன்றது தெரிய வந்தது.

கிட்டு மற்றும் டினா குடும்பத்தினர் மீது கொலை, கொடூர செயல், ஆதாரங்களை மறைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: south news