காதல் திருமணமாகவும் இருக்கலாம் – பிரபாஸ் ஓபன் டாக்

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் பாலிவுட் நைகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சுஜித் இயக்கியுள்ளார்.

இம்மாதம் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட பிரபாஸிடம் திருமணம் குறித்து கேட்கபப்ட்டது. அதற்கு பதில் அளித்தவர், திருமணம் எப்போது நடக்குமோ அப்போது நிச்சயம் நடக்கும். அது காதல் திருமணமாகவும் இருக்கலாம், என்று கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools