காதலை அறிவித்த நடிகர் கவுதம் கார்த்திக் – நடிகை மஞ்சுமா மோகன்
நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வைராஜா வை, ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மகாதேவகி, ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தற்போது சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்திலும் நடித்து வருகிறார்.
கவுதம் கார்த்திக் ‘தேவராட்டம்’ படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்நிலையில், தங்களின் காதலை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்கள்.
இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.