காதலி அதியா ஷெட்டியை கரம் பிடித்தார் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல்.ராகுல். இவரும், இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிராவின் கந்தாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றது. புதுமண தம்பதி கே.எல்.ராகுல் – அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை கே.எல்.ராகுல், அதியா இருவரும் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools