காதலில் கெளதம் மேனனை அடித்துக் கொள்ள ஆளே இல்லை – இயக்குநர் வெங்கட் பிரபு பாராட்டு
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி. இந்த படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குனர்கள் கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், வெங்கட் பிரபு பேசும்போது, முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜி படத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. காதல் என்று சொன்னவுடன், கவுதம் மேனன் இருக்கிறார். அவரை மிஞ்சி எடுக்க முடியுமா என்று நினைத்தேன். அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.
என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காதலும் கலந்து சொல்லியுள்ளேன். ஒரு குறும்படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது என்றார்.