X

காதலர் தினத்தில் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு

இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய இவர், அதன் பிறகு விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான், சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தை தயாரித்து இருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். காதலர் தினமான நேற்று நடிகை நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கு பூங்கொத்து கொடுத்து காதலர் தின வாழ்த்து கூறியுள்ளார். நயன்தாரா பூங்கொத்து கொடுக்கும் விடியோவை அவருடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில், “அவள் வந்து பூங்கொத்து கொடுத்தது முதல் முறை போல் இருக்கிறது” எனக் குறிப்பிட்டு அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோவை இவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.