காதலனின் பெயரில் கழுத்தில் நெக்லஸ் அணிந்த நடிகை ஜான்வி கபூர்
தமிழ், இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. இவர் இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார் இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற போது ஸ்ரீதேவி திடீரென மரணம் அடைந்தார் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகர்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில், ஜான்வி கபூரும் மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலித்து வந்தனர். ஷிகர் -ஜான்வி அடிக்கடி நேரில் சந்தித்து வந்தனர். சமீபத்தில் ஜான்வி – ஷிகர் ஜோடியாக திருப்பதி கோவிலுக்கு சென்றனர் .இவர்களது காதலை சமீபத்தில் போனிகபூரும் உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் மும்பையில் ‘மைதான்’ படத்தின் ‘பிரிமியர் ஷோ’ வுக்கு ஜான்வி வந்தார். வழக்கம் போல் அழகான தோற்றத்தால் கவர்ந்தார். ஆனால் இம்முறை அனைவரின் பார்வையும் அவர் அழகை விட கழுத்தில் இருந்த நெக்லஸ் மீதே இருந்தது.
மேலும் அந்த நெக்லஸில் ‘ஷிகு’ பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் ஜான்வி தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்திக்கொள்ள இந்த நகையை அணிந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஜான்வி திருப்பதி கோவிலில் வைத்து தான் தனது திருமணம் நடைபெறும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.