Tamilசெய்திகள்

காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் – மன்சூரலிகான் ஆவேசம்

வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரசாரத்தில் அவரது கலாட்டாவிற்கும் பஞ்சமில்லை. வேலூரில் இப்போது 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனை சமாளிக்க மன்சூர் அலிகான் பிரசார வாகனத்தில் தென்னை ஓலை பந்தல் அமைத்துள்ளார் .

அந்த நிழலில் நின்ற படியே மன்சூர் அலிகான் பேசி வருகிறார். வேலூர் மாவட்டத்தில் உள்ள காடு, மலைகளை அழித்து வருகின்றனர். நான் வெற்றி பெற்று வந்து காடு, மலைகளை, காப்பாற்றி, நீர் நிலைகள் அமைப்பேன், மற்றவர்களை போல் 5 வருடம் காணாமல் போகமாட்டேன், இங்கே தான் இருப்பேன் அதனை தொடர்ந்து, காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என ஆவேசமாக பேசினார்.