‘காஞ்சனா 3’ யை நம்பியிருக்கும் ஓவியா!
ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் `காஞ்சனா 3’. `முனி’, `காஞ்சனா’, `காஞ்சனா 2’ ஆகிய வரிசையில் இந்தப் படமும் தயாராகி இருக்கிறது. திகில் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, சூரி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஓவியா, வேதிகா ஆகிய 2 கதாநாயகிகளுடன் 3வதாக நிக்கி தம்போடி என்ற நாயகியும் இணைந்துள்ளார். பிக்பாஸ் மூலம் ஓவியா ஏற்பட்ட புகழை 90 எம்.எல் படத்தில் நடித்ததன் மூலம் கெடுத்துக் கொண்டார் என்று பேச்சு எழுந்துள்ளது.
எனவே ஓவியா தனது இமேஜை முனி4 படம் தான் தூக்கி நிறுத்தும் என்று நம்பி இந்த படத்தை எதிர்பார்த்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ மற்றும் ‘களவாணி 2’ படத்துல வர்ற கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்றார்.