Tamilசெய்திகள்

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 9-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்து ஐநூறைக் கடந்துள்ளது. இந்நிலையில், ஹமாசைக் கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இஸ்ரேல் – பாலஸ்தீன போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும் என்றார். இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பைடன், தற்போது சுதந்திர பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.