Tamilசெய்திகள்

காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள் – மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

* மோடி பணவீக்கத்தையும் வேலையின்மையையும் கொடுத்தார். இவர்கள் நாட்டை பலவீனப்படுத்துகிறார்கள். பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு சுருங்கிவிட்டது.

* நீங்கள் அனைவரையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறீர்கள், ஆனால் மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்வதன் மூலம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முடியாது.

* நாங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறோம். அதை சிதைப்பதை பற்றி அவர்கள் பேசுகிறார்கள்.

* இந்த நாட்டில், அரசியலமைப்பு உயர்ந்தது. நமது ஜனநாயகம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது

* காங்கிரஸ் வளரும் போதெல்லாம், அதை அடக்க முயற்சிக்கிறார்கள். நாங்கள் அடக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.

* நாடுதான் உயர்ந்தது, பின்னர்தான் கட்சிகள், மதங்கள். அனைவரும் நாட்டிற்காக ஒன்றுபட வேண்டும்.

* பஹல்காம் தாக்குதல் தொடர்பான நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டபோதும், பீகாரில் பிரதமர் உரையாற்றியது நாட்டின் துரதிர்ஷ்டம்.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.